கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார் (25 ஆகத்து 1906 - 7 நவம்பர் 1993) சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.2021 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியைத் தனது 19-ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.

மேலும் விவரங்களுக்கு
நன்கொடை