புத்திர சோகம் பத்தியதாலே
நித்திரையின்றி சுத்தியதாலே
புத்தியை இழந்து பித்தனுமாகி
நித்தியமற்ற சத்திய உயிரை
விட்டிடயெண்ணி புத்திரன் மலையேறி
வந்திட்ட சுப்பா! அத்தனையும் ஆன்மீக
வழியேகி மானுட சேவை செய்ய வைக்க
வித்தக குமரனின் சித்தமே அல்லவா?
அல்லலை விடுவாய்! ஆறுதல் கொள்ளுவாய்!
குமரகிரி ஆதிபகவன் ஆலயம் எழுப்பி
இப்பகுதி மக்கள் இயற்கையாய் விவசாயமும்
கால்நடையும் இணைத்தே வளர்த்து
இன்புற்று வாழ அறவழி காட்டிட அர்ப்பணி
அதுவே உன் விதியப்பா விளங்கிக்கொள்!
தெளிந்திடு! விரைந்திடு! செயல் புரிந்திடு!
காலம் உனக்கு கைகொடுக்கும்!
வரலாறு உன்னை நினைவில்கொள்ளும்!
கவலையை விட்டு காரியம் ஆற்று!
குமரகிரி வள்ளிகுமரனைப் போற்று!
நூறு ஆண்டு முன்பு ஆடு மாடு
அத்தனை கால்நடைகளும் வளர்த்து
அதன் பயனாய் நல்வேளாண்மை செய்து
ஊரே கூட்டுக் குடும்பமாய் நலமாய்
வளமாய் நிறைவாய் வாழ்ந்த நாளில்
ஆதவன் தோன்றி அன்புடன் வாழ்ந்தான்
அன்னை தந்தை அனைவரும் காத்திட!
ஆடு மாடு மேய்திடுவான்! அவன் வயது
பையன்களுடன் அனுதினமும் ஆடிப்பாடி
விளையாடி ஆனந்தமாய் இருந்திடுவான்!
மழை பெய்து மண் நனைந்த உடனே
ஏர் பூட்டி உழவோட்டி வயல் ஆக்கி
விவசாய பணியாவும் செய்திடுவான்!
தைபிறந்து கைநிறைந்து பைநிறைந்தால்
ஊர்உறவு கூட்டி விருந்தாக்கி மகிழ்ந்திடுவான்!
இப்படியாக இனிதே கழிந்த காலம்
இடியாய் வந்தான் ஒரு அரக்கன்!
தினம் ஒரு வீட்டில் இருந்து
விருந்து கொண்டு வரவேண்டும் என்று
ஆணையிட்டு சென்று அமர்ந்துகொண்டான்
வள்ளிக்குமரன் அவ்வப்போது வந்து
விளையாடும் குமரகிரி மலை மேலே
அந்த விசயம் எதுவும் அறியாமலே!
ஒருநாள் ஆதவன் அந்த அரக்கனுக்கு
விருந்து கொண்டு செல்லும் நேரம்
சூறாவளி காற்று சுழன்றடித்தாலே
கொண்டுபோன விருந்தெல்லாம் கொட்டி விட்டது!
என்ன செய்வது ஏது செய்வது
என்று ஏதும் அறியாமலே
சென்று அரக்கன் முன் நின்றபோது
கோபம் கொண்டு கண் சிவந்து
பல் கடித்து இடிபோல் கத்தி
கொன்று தின்ன ஆதவனை கைப்பற்றி
அவன் உரக்கச் சிரித்த அவ்வேளை
வந்திடுவாய் வள்ளிக்குமரா!
நீயின்றி யார் உளார் எனக்கு?
நித்தமும் நினைந்திடுவேன்
காத்திடுவாய் கந்தகுமரா!
என்றே ஆதவனும் அகம் உருக
வேண்டி கொண்டிடவே
வேகமாய் வந்ததே வேலாயுதம்!
அரக்கனின் உயிரையும் எடுத்ததே!
அவ்வாறு உயிர்பிழைத்த அது முதலே
அவ்விடமே கதியென்று அங்கேயே நின்று
வருக வருக வள்ளிக்குமரா என்று
அனுதினமும் அழுதழுது வேண்டி
எலும்பும் தோலுமாய் இளைத்து
உயிர் உருக திருப்புகழ் பாடியதால்
வந்திட்டான் வள்ளிக்குமரன்!
அவன் தலை மீது கை வைத்து
வாழ்த்தி சொல்லிட்டான் வருந்தாதே என்று!
நாளும் இந்தப் புவியிலே நீ காணும்
சந்திரனும் நானே சூரியனும் நானே!
வன்னியும் நானோ குமரனும் நானே!
ஆதியும் நாலோ பகலனும் நானே!
இயற்கையாய் எங்குமுள்ள சன்னைத்தேடி நீ
இனைத்து எலும்புருக பாடுவதேன்?
சந்திரனும் சூரியனும் என வடிவன்
வள்ளிக்குமரன் என்பிரதி வடிவம்!
ஆதி பகவனும் என் ஒருருவம்!
இயற்கையாய் உள்ளேன் நான்!
எல்லா உயிரும் என் படைப்பே!
இயற்கையே சத்திய
இயற்கையே நித்தியம்!
நீ பெற்ற அறிவும் நான் தந்ததே!
அது தந்த செல்லமும் நான் தந்ததே!
இயற்கையை கடந்து எதுவுமில்லை!
இயற்கையை அழித்தால் எதுவுமில்லை!
இதுவே மனிதனுக்கு எல்லை!
இதனைப்புரிந்து இயற்கையோடு இயைந்து
வாழும் வாழ்க்கையில் இல்லை தொல்லை!
இதனை இப்புலி மக்களுக்கு அவ்வப்போது சொல்ல
மகாதமாக்களை அனுப்பி வைத்தாலும்
அதனை மறந்து செல்லும்
மாந்தரினத்திற்கு மீண்டும் தினைவுபடுத்த
நீயும் தொண்டு செய்க!
60 ஆண்டுக்கு பிறகு வாரியார் வருவார்!
அவர் இங்கு ஒரு வேலினை நடுவார்!
அதன்பிறகு 40 ஆண்டு கழித்து
பிள்ளையை இழந்த அப்பன்
அவன் பெயர் சுப்பன்
உயிரை விடவே வருவான்!
அப்போது கிடைத்திடும் அவன் கையில்
நீ எழுதி வைத்திடும் சுவடி!
அதனால் தெரிந்திடும்
இவ்விடத்தின் மகிமையை அவனி!
ஆதிபகவன் ஆலயம் எழுப்ப
அவனுக்கு இடுவாய் ஆணை!
என்று சொல்லியே மறைந்தான் இறைவன்
வள்ளிக்கும்ரன் அவனே ஆதிபகவன்!
ஆதலால் சுப்பனே! சூர்ய அப்பனே!
குமரகிரி அடியனே! சொல்வது கேள்!
இது என் வாக்கு அல்ல!
இறைவனின் வாக்கு!
உயிரைப் போக்கும் எண்ணம் தொலைத்து
பயிரைக் காக்கும் எண்ணம் வளர்ப்பாய்!
ஆவி துறக்கும் சித்தம் தெளிந்து
ஆலயம் எழுப்பும் எண்ணம் கொள்வாய்!
மண்ணுலகில் மானுட சேவை புரிந்து
விண்ணுலகில் குமரனின் அருளைப் பெறுவாய்!
ஆதிபகவனுக்கு இங்கொரு ஆலயம் எழுப்பு!
இவ்வுலக மக்கள் இயற்கையோடு இயைந்து
கால்நடையுடன் வேளாண்மையும் கலந்தே செய்து
இனிதே வாழ என்றும் அருள் புரிவான்
குமரகிரியில் வாழும் ஆதி பகவான்!
இதனை எடுத்து சொல்வதே உனது பணி!
ஆன்மீகப் பணியும் மக்கள் பணியும்
இணைத்தே செய்து குமரகிரி அடியனாய்
இறவாபுகழ் அடைந்து என்றும் வாழ்க!
நன்றி நன்றி மிக்க நன்றி!
இதைச் சொல்ல வைத்த இறைவனுக்கு
என்றும் நன்றி நன்றி!
இதைச் சொல்ல என்னைத் தேர்வு செய்த
குமரனுக்கு நன்றி நன்றி!
ஆதிபகவன் ஆலயம் எழுப்பி
வாழும் உலகிற்கு வழிகாட்டும்
இனிவரும் குமரகிரி அடியாருக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றி நன்றி!
குமரகிரி அடியாரின் இயற்கை வழிபற்றி
இன்புற்று வாழ்ந்திட வந்திடும்
இப்புவி மாந்தருக்கும்
என்றென்றும் நன்றி!